அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்


அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்
x

பேரணாம்பட்டு அருகே அன்னாசி பழ தோட்டத்தை காட்டுயானைகள் சூறையாடின.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே உள்ள சேராங்கல் கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் 2 காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள 4 மாமரங்களை முறித்து அதில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்களை நாசப்படுத்தியது. மேலும் அங்கிருந்த ஒரு தென்னை மரத்தையும், 4 கல்கம்பங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தின.

இதனை தொடர்ந்து அருகிலுள்ள மோகன் பாபு என்பவருக்கு சொந்தமான அன்னாசி பழ தோட்டத்தில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த அன்னாசி பழ செடிகளை பிடுங்கி எறிந்து, பழங்களை ருசித்து சாப்பிட்டது. மேலும் அங்கிருந்த மாந்தோப்பில் மாமரங்களையும் முறித்து, மாங்காய்களை நாசம் செய்தன.

இந்த யானைகள் இரவு 10 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் வரை பிளிறியவாறு சுற்றித் திரிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. அங்கு ரோந்து பணிக்கு வந்திருந்த வனகாப்பாளர் சதீஷ் தனியாக சென்று யானைகளை விரட்ட முடியாமல் திணறினார். விவசாயிகளும், கிராம மக்களும் வன காப்பாளர் சதீஷ் உடன் இணைந்து தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும் கற்றாழை கொள்ளி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


Next Story