கோவில், தொழிலாளர் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள்


கோவில், தொழிலாளர் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x

வால்பாறையில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் கோவில் மற்றும் தொழிலாளர் குடியிருப்பை சேதப்படுத்தின.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் கோவில் மற்றும் தொழிலாளர் குடியிருப்பை சேதப்படுத்தின.

கோவில் சேதம்

தமிழக -கேரள எல்லையில் அக்காமலை எஸ்டேட் வனப் பகுதி யில் கடந்த சில நாட்களாக 5 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு யானைகள் கூட்டம் அக்காமலை எஸ்டேட் அருகே ஊசிமலை டாப் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

அந்த யானைகள் கிருஷ்ணன் என்பவரின் வீட்டை இடித்து உள்ளே இருந்த உணவுகளை சாப்பிட்டும், பொருட்களை உடைத்தும் சேதப்படுத்தியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு யானைகளை விரட்டினர்.

இதனால் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் பதுங்கிய யானைகள் மீண்டும் மகா மாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்து கோவிலில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

காட்டு யானைகள்

உடனே தொழிலாளர்கள், யானைகளை வன பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் அவை, தொழிலாளர்களின் குடியி ருப்பு பகுதிக்கு அருகே ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு நிற்கிறது.

இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் வால்பாறை அருகே சோலையாறு நகரில் குடியி ருப்பு பகுதியில் கடந் 10 நாட்களாக யானை ஒன்று சுற்றித் திரிகி றது. அது பலாமரங்களில் இருக்கும் பலாப்பழங்களை தின்று விட்டு யானை நேற்று முன்தினம் நள்ளிரவு சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தின் வழியாக நடந்து சென்றது.

கேமராவில் பதிவானது

யானை நடமாடும் காட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் அங்கு வரும் நோயாளி கள் மற்றும் ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

எனவே சோலையாறு நகர் இடதுகரை வலது கரை பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story