ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகள் தேக்கத்தால் வால்பாறைக்கு காட்டு யானைகள் வருகை அதிகரிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகள் தேக்கத்தால் வால்பாறைக்கு காட்டு யானைகள் வருகை அதிகரிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகள் தேக்கத்தால் வால்பாறைக்கு காட்டு யானைகள் வருகை அதிகரித்து உள்ளது. அதனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

ரேஷன் கடைகளில் அரிசி மூட்டைகள் தேக்கத்தால் வால்பாறைக்கு காட்டு யானைகள் வருகை அதிகரித்து உள்ளது. அதனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

ஆய்வு செய்ய வேண்டும்

வால்பாறையில் 29 மகளிர் சுய உதவிக் குழு ரேஷன் கடை, 2 அமுதம் ரேஷன் கடை, 17 சிந்தாமணி ரேஷன் கடை என மொத்தம் 48 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளுக்கு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு பொது வினியோக திட்டம் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வால்பாறையில் 2017-ம் ஆண்டு 20 ஆயிரத்து 398 ரேஷன் கார்டுகள் இருந்தது. 2020-ல் 17 ஆயிரத்து 359 ரேஷன் கார்டுகள் இருந்தது. தற்போது 16 ஆயிரத்து 354 ரேஷன் கார்டுகள் உள்ளது. இந்த ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை வழங்கப்படுகிறது. ஆனால் வால்பாறை பகுதியில் தற்போதுள்ள ரேஷன் கார்டுகளை பொறுத்து ரேஷன் பொருட்கள் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் வால்பாறை பகுதியில் இருக்கின்றார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

காட்டு யானைகளால் சேதம்

இது தவிர மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மூலம் கூடுதலாக 7 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் அதிகளவிலான ரேஷன் அரிசி இருக்கிறது. இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் மிதமிஞ்சிய அளவிலான ரேஷன் அரிசிகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி தேக்கம் அடைந்து உள்ளதால் அரிசிைய மோப்பம் பிடித்து காட்டுயானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டம் ரேஷன் கடைகளை உடைத்து அரிசியை எடுத்து சாப்பிட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகள் சேதம், ரேஷன் கடைகளிலுள்ள அரிசி சேதம் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட வழங்கல் அதிகாரிகள் வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வால்பாறை பகுதியில் எவ்வளவு ரேஷன் கார்டுகள் உள்ளது.

எவ்வளவு ரேஷன் அரிசிஇருந்தால் போதும் என்பதை கண்காணிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக ரேஷன் அரிசி வருவதை நிறுத்தி தேவைப்படக்கூடிய இடங்களுக்கு அந்த ரேஷன் அரிசிபயன்படுத்துவதற்கு வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story