தரை பாலத்தில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்


தரை பாலத்தில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்
x

தேன்கனிக்கோட்டை பகுதியில் கனமழை: தரை பாலத்தில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவிசாமிபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இதே ஊராட்சியை சேர்ந்த பண்டேபுரம், மேல்சாமிபுரம், பேடர் கொட்டாய், ஜாகிர் ஸ்ரீராமபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமமக்கள் அங்குள்ள தரைமட்ட ஆற்று பாலத்தை கடந்துதான் செல்லவேண்டும். இந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கிராமமக்கள் ஒருவர் கை ஒருவர் பிடித்து கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். இந்த நிலை ஒவ்வொறு ஆண்டும் நீடித்து கொண்டுள்ளது. ஆதலால் இந்த பகுதிக்கு மேல்பாலம் அமைத்து எங்கள் உயிரையும், உடமைகளையும், காப்பாற்றிகொடுக்க வேண்டும் என்று கிராமத்து மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story