கல்வராயன்மலையில் காட்டாற்று வெள்ளத்தை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் விபரீதம் நிகழும் முன்பு தடுத்து நிறுத்த கோரிக்கை


கல்வராயன்மலையில்  காட்டாற்று வெள்ளத்தை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்  விபரீதம் நிகழும் முன்பு தடுத்து நிறுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 14 Oct 2022 6:45 PM GMT (Updated: 14 Oct 2022 6:46 PM GMT)

கல்வராயன்மலையில் காட்டாற்று வெள்ளத்தை கடந்து பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல் வெள்ளிமலை கிராமத்தில் ஏக வலையா அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் கல்வராயன் மலை பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியின் பின்புறமாக ஓடும் வெள்ளிமலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

தடுப்பணை

கரியாலூர், வெள்ளிமலை, மாவடிப்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த தடுப்பணை வழியாக தான் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். அதவாது, இந்த தடுப்பணை வழியாக சென்றால் சுமார் 500 மீட்டர் தூரத்தில் பள்ளியை அடைந்து விடலாம்.

ஆற்றை பயன்படுத்தாமல் செல்ல வேண்டுமெனில் சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றிச்செல்ல வேண்டும். இதனால் மேற்கூறிய 3 கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆற்றை கடந்து தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

காட்டாற்று வெள்ளம்

நேற்று முன்தினம் கல்வராயன் மலை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளிமலை ஆற்றில் கட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதை பொருட்படுத்திக்கொள்ளாமல், தங்களது உயிரை பணயம் வைத்து தடுப்பணையின் வழியாக மாணவர்கள் சென்று வருகிறார்கள்.

இனி வரும் காலம் முழுவதும் மழைக்காலம் என்பதால், விபரீதம் ஏதும் நிகழும் முன்பு இதை தடுத்து நிறுத்திட வேண்டும் இல்லையெனில் இந்த மாணவர்கள் எளிதில் பள்ளிக்கு சென்று வர மாற்று வசதியை ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story