வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது


வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது
x

கரூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்

வனப்பகுதியில் சோதனை

கரூர் வெங்கமேடு பகுதிக்குட்பட்ட அருகம்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகளை அவ்வப்போது வேட்டையாடுவதாக வன த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தார். இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

நாட்டு துப்பாக்கி பறிமுதல்

விசாரணையில், அவர் கரூர் அரசு காலனி வேட்டைக்காரன் புதூரை சேர்ந்த திருப்பூர்சிங் (வயது 45) என்பதும், அவர் நாட்டு துப்பாக்கியால் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த முயல், கவுதாரி, பூனை, கொக்கு உள்ளிட்ட வனவிலங்குகளை சுட்டு பிடித்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவரை வனச்சரக அலுவலர் தண்டபாணி விசாரணை செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து நாட்டுதுப்பாக்கி மற்றும் அவர் சுட்டுபிடித்த முயல், கவுதாரி உள்பட வனவிலங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story