நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?


நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

சிங்கம்புணரியில் உள்ள நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களை இணைத்து தனி தாலுகா அந்தஸ்து பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்கம்புணரி நகர் பகுதியில் மட்டும் சுமார் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 25,000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தாலுகா தரம் உயர்த்தப்பட்ட சிங்கம்புணரி பகுதியில் அதற்கான அடிப்படை வசதிகள் இன்று வரை செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக கடந்த 1964-ல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நூலகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஓட்டு கட்டிடத்தில் நூலகம் கட்டப்பட்டது. சுமார் 5000 உறுப்பினர்களைக் கொண்டு 80 புரவலர்கள் உள்ள இந்த நூலகத்திற்கு போதுமான இட வசதி இன்றி வாசகர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்... சிங்கம்புணரி பகுதியில் மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்த நூலகம் இன்று வரை ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கி வருவது வேதனைக்குரியது. இந்த நூலகத்தில் நாள் ஒன்றுக்கு 40-க்கும் மேற்பட்ட வாசகர்கள் புத்தகங்களை படிக்க வருகிறார்கள். ஆனால் படிக்க போதுமான இட வசதிகள் இல்லாமல் உள்ளது. என்றார். எனவே இந்த நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்களும் வாசகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story