சித்த மருத்துவ பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு திருவெண்காடு, மங்கைமடம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு தனியாக இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் சித்த மருத்துவ பிரிவின் மூலம் கபசுர குடிநீர், நில வேம்பு குடிநீர் உள்ளிட்டவை நோயாளிகளுக்கு தினம் வழங்கப்பட்டு வந்தது.
சித்த மருத்துவ பிரிவு
தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சித்த மருத்துவ பிரிவு இயங்கி கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் பல இடங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
புதிய கடடிடம் கட்ட வேண்டும்
கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் சித்த மருத்துவ பிரிவு கட்டிடம் புதிதாக கட்டிடத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.