தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?


தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
x

சீர்காழியில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருமண மண்டபத்தில் தாலுகா அலுவலகம்

சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் பழைய தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், சார் கருவூலம், கிளை சிறைச்சாலை, வட்ட வழங்கல் அலுவலகம், புள்ளியல் துறை அலுவலகம், பத்திரப்பதிவு துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், அரசு இ சேவை மையம், ஆதார் மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில் தாலுகா அலுவலக கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதனால் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்ததாலும் தாலுகா அலுவலக கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அடிப்படை வசதிகள் இல்லை

தற்போது அந்த அலுவலக வளாகத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம், ஓய்வறை, பொதுமக்கள் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் போதிய இடவசதி இல்லாததால் குறுகிய இடத்திலேயே தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு, புள்ளியல் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அச்சத்துடன் பணிபுரியும் ஊழியர்கள்

இதன் காரணமாக பணி செய்யும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது செயல்படும் தனியார் திருமண மண்டபம் முறையாக பராமரிக்கப்படாததால் மேற்கூரையில் அமைக்கப்பட்ட அட்டைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் அச்சத்தோடு சென்று வருகின்றனர்.

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

மேலும் தற்போது செயல்படும் தாலுகா அலுவலகத்தை சுற்றிலும் செடி, கொடிகள் மண்டி காணப்படுவதால் அடிக்கடி பாம்புகள் அலுவலகத்துக்குள் வந்து செல்கிறது. இதனால் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தோடு இருந்து வருகின்றன.

எனவே பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய தாலுகா அலுவலக கட்டிடம், சார் கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம், புள்ளியல் துறை அலுவலகம், உள்ளிட்ட புதிய கட்டிடடங்களை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள், ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story