திருமக்கோட்டை பிடாரி குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்டப்படுமா?


திருமக்கோட்டை பிடாரி குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்டப்படுமா?
x

திருமக்கோட்டை பிடாரி குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்டப்படுமா?

திருவாரூர்

திருமக்கோட்டை ஊராட்சியில் மையப்பகுதியில் பிடாரி குளம் அமைந்துள்ளது. இநத குளத்ைத சுற்றி 3 பக்கமும் கோவில்களும், ஒரு பக்கம் கடைவீதியும் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி பொதுமக்களும், பக்தர்களும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த குளத்தில் செடி,ெகாடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் குளத்தில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் உள்ளன. இதனால் குளத்தை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் குளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் தேங்கி உள்ள செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story