விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கொப்பரை தேங்காய் கொள்முதலில் உள்ள சிக்கல்களை நீக்க நடவடிக்கை-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு


விவசாயிகளிடம் இருந்து பெறப்படும்  கொப்பரை தேங்காய் கொள்முதலில் உள்ள சிக்கல்களை நீக்க நடவடிக்கை-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கல்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு அளித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கல்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு அளித்து உள்ளார்.

நடைமுறை சிக்கல்கள்

பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் அடங்கல் பட்டியலில் உள்ள தென்னை சாகுபடி பரப்பிற்கு ஏற்ப ஒரே தடவையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் பணிகளை தினமும் காலை 9 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர், கிரேடு அதிகாரி ஆகியோர் தொடங்க வேண்டும். விவசாயிகளை அலைக்கழிக்காமல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு 2 மாவட்டங்களில் தென்னந்தோப்பு இருந்தாலும், அதற்கு ஏற்ப கணக்கீடு செய்து முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் இருந்து அரசு விடுமுறை உள்பட அனைத்து நாட்களிலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதலை அக்டோபர் மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

பணம் பட்டுவாடா

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காய்க்கு அந்தந்த மாவட்ட அளவிலேயே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். வெளிச்சந்தையில் கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலை உயரும் வரை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் குறைந்தபட்ச ஆதார விலையில் காலக்கெடு இன்றி கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் இருந்து ஒரு முறை தான் கொள்முதல் செய்யப்படும் என்ற நிபந்தனையை 50 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 270 கிலோ என்ற வீதத்தில் தொடர்ந்து கொள்முதல் செய்ய வேண்டும். 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், இதுவரை 17 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. எனவே நிபந்தனைகளை தளர்த்தி கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். இதன் மூலமே தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story