அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
திட்டச்சேரி
திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை அறுவடை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருமருகல், மேலப்பூதனூர், திருப்புகலூர், அம்பல், பொறக்குடி, திருப்பயத்தங்குடி, விற்குடி, வாழ்குடி, போலகம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகவும், ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி திடீரென கனமழை பெய்வதால் அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமாகும் அபாயம் உள்ளது.
நடவடிக்கை
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திருமருகல் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.