காக்கையாடி மணக்கரை சாலை தார்ச்சாலையாக மாற்றப்படுமா?


காக்கையாடி மணக்கரை சாலை தார்ச்சாலையாக மாற்றப்படுமா?
x

காக்கையாடி மணக்கரை சாலை தார்ச்சாலையாக மாற்றப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே காக்கையாடி மணக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்காக காக்கையாடி மணக்கரைக்கும், தண்ணீர்குன்னத்திற்கும் இடையே இணைப்பு சாலை ஏற்படுத்தப்பட்டது. இந்த சாலையை காக்கையாடி மணக்கரை, தண்ணீர்குன்னம், ஓவர்ச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தசாலை சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த மழையால் குண்டும், குழியுமான சாலையில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்துவதில் கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் சேறும், சகதி ஏற்பட்டு கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குண்டு்ம், குழியுமான சாலையை தார்சாலையாக மாற்றி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story