லாலாபேட்டை ரெயில்வே சுரங்கப்பாதை திறக்கப்படுமா?


லாலாபேட்டை ரெயில்வே சுரங்கப்பாதை திறக்கப்படுமா?
x

முன் அறிவிப்பு இல்லாமல் லாலாபேட்டை ரெயில்ேவ சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் 2 கிலோ மீட்டர் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே பணிகளை விரைந்து முடித்து ரெயில்வே சுரங்கப்பாதை திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

சுரங்கப்பாதை அடைப்பு

கரூர் மாவட்டம், லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே திருச்சி- கரூர் ெரயில் பாதை செல்கிறது. இதனால் பொதுமக்கள் ரெயில் பாதையை கடந்து செல்லும் விதமாக ெரயில்வே துறை சார்பாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ெரயில் பாதயை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதை வழியாக திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரும் கரூர் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.

கோரிக்கை

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணி செய்வதாக கூறி முற்களை போட்டு பாதையை அடைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று, லாலாபேட்டை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே பராமரிப்பு பணியை விரைந்து முடித்து உடனடியாக சுரங்கப்பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

பிழைப்பு நடத்த முடியவில்லை

லாலாபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார்:- நான் லாலாபேட்டை பஸ் நிலையத்தில் ஆட்ேடா ஓட்டி வருகிறேன். லாலாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் யாரேனும் ஊருக்குள் செல்ல வேண்டுமானால் ஆட்டோவில் லாலாபேட்டை ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக தான் அவர்களை அழைத்து செல்வோம்.

தற்போது எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ரெயில்வே சுரங்கப்பாதை அடைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் 2 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியது உள்ளதால் பலர் ஆட்டோவில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு அன்றாட பிழைப்புக்கே மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதையை திறக்க வேண்டும்.

ேவலைக்கு செல்லவில்லை

பிள்ளபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார்:- நான் லாலாபேட்டை பகுதியில் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். இந்த பகுதிகளில் உள்ள விவசாய பொருட்களை எனது வேனில் ஏற்றி கொண்டு லாலாபேட்டை ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும். தற்போது பராமரிப்பு பணி நடந்து வருதால் அந்த வழியாக வேனை எடுத்து செல்வதில்லை சிரமம் உள்ளது.

இதனால் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சுற்றி செல்ல வேண்டியது இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். பராமரிப்பு பணி எப்போது முடியும் என்று கேட்டால் சரியான பதில் இல்லை.

வீண் செலவு ஆகிறது

லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்த முருகேசன்:- நான் தினமும் வயல்களில் இருந்து வெற்றிலைகளை பறித்து சென்று லாலாபேட்டையில் உள்ள ஏல மார்க்கெட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்பனை செய்து வருவேன். தற்போது சுரங்கப்பாதை பராமரிப்பு பணி நடந்து வருவதால் மோட்டார் சைக்கிளில் மூட்டைகளை ஏற்றி கொண்டு ரெயில்வே கேட் மறுபுறம் நிறுத்தி விட்டு, பின்னர் மூட்டைகளை மறுபக்கமாக தலையில் சுமையாக கொண்டு சென்று வைப்பேன்.

பின்னர் அங்கிருந்து ஏதாவது ஒரு வாகனத்தை பிடித்து ஏல மார்க்கெட்டிற்கு வெற்றிலைகளை கொண்டு விற்பனை செய்து வருகிறேன். இதனால் வீண் செலவு ஏற்படுகிறது. சுரங்கப்பாதை திறந்து இருந்தால் எனது மோட்டார் சைக்கிளிலேயே அனைத்து மூட்டைகளையும் ஏற்றி கொண்டு மார்க்கெட்டிற்கு கொண்டு இறக்கி விற்பனை செய்ய முடியும். எனவே உடனடியாக சுரங்கப்பாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story