பயணிகள் நிழலகத்தை பராமரிக்க வேண்டும்


பயணிகள் நிழலகத்தை பராமரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் நிழலகத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம்- சேந்தங்குடி சாலையில் உள்ளது திட்டச்சேரி கிராமம். இங்கு உள்ள பயணிகள் நிழலகத்தை திட்டச்சேரி, வடபாதிமங்கலம், சேந்தங்குடி, விக்ரபாண்டியம், ஊட்டியாணி, திருநாட்டியத்தான்குடி, மாவூர், திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த பயணிகள் நிழலகம் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. நிழலகத்தின் மேற்கூரையில் விரிசல்கள் காணப்படுகின்றன. பயணிகள் நிழலகத்தை சுற்றிலும் குப்பை கொட்டப்படுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இரவு நேரங்களில் நிழலகத்துக்குள் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் வருவதால் பயணிகள் அச்சம் அடைகின்றனர். பராமரிப்பு இல்லாத இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்துவதற்கு கிராம மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். பலர் சாலையோரத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்து பஸ் ஏறி செல்கிறார்கள். எனவே பயணிகள் நிழலகத்தை சுற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டு, விரிசல்களை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story