சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?


சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?
x

சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகரப்பொதக்குடி

கூத்தாநல்லூர் அருகே அகரப்பொதக்குடியில் இருந்து பூதமங்கலம் செல்லும் சாலை வெள்ளையாற்றின் கரையோரத்தில் அமைக்கப்பட்டது. இந்த சாலையை அகரப்பொதக்குடி, ஆய்குடி, புதுக்குடி, பொதக்குடி, காவாலக்குடி, கண்கொடுத்தவனிதம், திருமாஞ்சோலை, பூதமங்கலம், கீழகண்ணுச்சாங்குடி, வேளுக்குடி, கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

பள்ளங்கள்

இந்த சாலையில் அகரப்பொதக்குடி என்ற இடத்தில் ஆபத்தான வளைவில், வெள்ளையாற்றின் கரையோரத்தில் சாலையையொட்டி மண் சரிவு ஏற்பட்டது போல பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்லும் போது, வாகனங்கள் கவிழ்ந்து விழும் அளவிற்கு அந்த பள்ளங்கள் காட்சி அளிக்கிறது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் சாலையோர கரையோரத்தில் கடந்து சென்று வருவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் போது பள்ளம் ஏற்பட்டு சாலையின் கரையோரத்தில் உடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story