சர்க்கரை விலை அதிகரிக்கும்?


சர்க்கரை விலை அதிகரிக்கும்?
x

சர்வதேச அளவில் வரும் சீசனில் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதால் விலை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


சர்வதேச அளவில் வரும் சீசனில் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதால் விலை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறைய வாய்ப்பு

இதுபற்றி வணிக வட்டாரத்தினர் கூறியதாவது:-

சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தி அளவானது இந்திய சர்க்கரை உற்பத்தி அடிப்படையில் கணிக்கப்படும்.

அந்த வகையில் வரும் அக்டோபர் தொடங்கி செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தி 1.21 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 2.1 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.

177.52 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் 174.8 மில்லியன் டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தியாகும் என கூறப்படுகிறது. 176.53 மில்லியன் டன் சர்க்கரை தேவைப்படும் நிலை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க சந்தை

உலக சந்தையில் சர்க்கரை டன் ரூ.45,950 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தையில் சர்க்கரை ரூ.50 ஆயிரத்து 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் சீசனில் 31.7 மில்லியன் சர்க்கரை உற்பத்தி ஆகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 30.4 மில்லியன் சர்க்கரை உற்பத்தி ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு சீசனில் 5 மில்லியன் டன் சர்க்கரை இருப்பு உள்ளது. அதே நேரத்தில் வரும் சீசனில் தேவை 28.1 மில்லியன் டன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சீசன் முடிவில் 7 மில்லியன் டன் சர்க்கரை இருப்பு இருக்க வாய்ப்புள்ளது.

விலை உயர வாய்ப்பு

எனினும் வரும் அக்டோபர் மாதத்தில் பெய்யும் மழையை பொறுத்துதான் சர்க்கரை உற்பத்தி குறித்து கணிக்க முடியும் எனவும்,, தற்போது அது குறித்து உறுதியாக கூற இயலாது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் வரும் சீசனில் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் விலை உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story