அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்படுமா?; கிராம மக்கள் எதிர்பார்ப்பு


அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்படுமா?; கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 8 Jan 2023 10:39 PM IST (Updated: 8 Jan 2023 11:04 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே அண்ணாபுரத்தில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

கம்பம் அருகே அண்ணாபுரத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட ரூ.9½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பின்னர் அதற்கான பணிகள் தொடங்கின. மேலும் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு பல வாரங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை திறந்து, குழந்தைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story