மீண்டும் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு


மீண்டும் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரடி நடமாட்டம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி அமைந்துள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் கடந்த 6-ந் தேதி கரடி கடித்து குதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஊருக்குள் கரடி வந்ததாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் தீப்பந்தங்களுடன் சென்று தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கரடி நடமாட்டத்திற்கான அறிகுறி எதுவும் இல்லை என தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமரா அமைப்பு

இருப்பினும் பொதுமக்களின் அச்சத்தை போக்குவதற்காக கடையம் வனச்சரக அலுவலர் கருணாமூர்த்தி, வனவர் முருகேசன், வனக்காப்பாளர் ரமேஷ் பாபு, சோமசுந்தரம், மணி, காட்வின் மற்றும் வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என 48 பேர் நேற்று வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் கரடி நடமாட்டத்தை அறிவதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கரடி நடமாட்டம் இருப்பதாக பரவும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story