தஞ்சையில் இருந்து முத்துப்பேட்டைக்கு மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
தஞ்சையில் இருந்து முத்துப்பேட்டைக்கு மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
திருவாரூர்
தஞ்சையில் இருந்து வடுவூர், மன்னார்குடி, திருமக்கோட்டை, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி வழியாக முத்துப்பேட்டைக்கு ஒரு பஸ் சென்று வந்தது. இந்த பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபரிகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் முத்துப்பேட்டைக்கு செல்ல வேண்டுமானால் திருமக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று, பின்னர் அங்கிருந்து முத்துப்பேட்டைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் தஞ்சையில் இருந்து முத்துப்பேட்டைக்கு இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story