இருக்கன்குடிக்கு மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
ஆலங்குளத்தில் இருந்து இருக்கன்குடிக்கு மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளத்தில் இருந்து இருக்கன்குடிக்கு மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வந்து செல்பவர்களுக்கு வந்து செல்வதற்கு வசதியாக கிராம பகுதியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.
அதேபோல ஆலங்குளத்திலிருந்து சாத்தூர் வழியாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு அரசுபஸ் இயங்கி கொண்டு இருந்தது.
பக்தர்கள் கோரிக்கை
இதனால் இப்பகுதியில் உள்ள ஆலங்குளம், கொங்கன்குளம், தொம்பகுளம், வலையப்பட்டி, கரிசல்குளம், கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, எதிர்கோட்டை, கீழாண்மைறைநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் எளிதில் கோவிலுக்கு சென்று வந்தனர்.
கொரோனா காலக்கட்டத்தில் இந்த பஸ் சாத்தூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. தற்போது அதுவே நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் இருக்கன்குடிக்கு செல்பவர்கள் சாத்தூருக்கு சென்று அங்கிருந்து மற்றொரு பஸ்மூலம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே ஆலங்குளத்தில் இருந்து இருக்கன்குடி செல்லும் வகையில் மீண்டும் அந்த அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.