சேமுண்டி-கீச்சலூர் இடையேயான வாய்க்கால் முறையாக தூர்வாரப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


சேமுண்டி-கீச்சலூர் இடையேயான வாய்க்கால் முறையாக தூர்வாரப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

சேமுண்டி- கீச்சலூர் இடையே வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் சீராக செல்ல முடியாமல் சாலையில் வெளியேறி தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேமுண்டி-கீச்சலூர் இடையேயான வாய்க்கால் முறையாக தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்: கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி சேமுண்டி பகுதியில் அணை உள்ளது. தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யக்கூடிய மழை நீர் அணைக்கு வந்து சேர்கிறது. தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்காக அடிக்கடி தண்ணீர் திறக்கப்படுகிறது. சேமுண்டியில் இருந்து கம்மாத்தி வழியாக புத்தூர்வயல் வரை வாய்க்கால் செல்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமல் கிடந்தது. இதனால் தொடர் பலத்த மழை பெய்யும் காலங்களில் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது வாய்க்கால்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் வெளியேறி விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் வாய்க்காலை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வாய்க்கால் தூர்வாரப்பட்டு அதன் கரையோரம் சிமெண்டு கலவை பூசப்பட்டது. ஆனால் சேமுண்டி- கீச்சலூர் இடையே சுமார் 1 கி.மீட்டர் தூரம் வாய்க்கால் தூர்வாரப்படாமல் பாதியில் விடப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பெய்த கனமழையில் வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து சாலையிலும் தண்ணீர் தேங்கியது. மேலும் தற்போது பெய்து வரும் மழையிலும் வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் சாலையில் தேங்கி வருகிறது. இதனால் வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story