சேதமடைந்த மீன்பிடி துறைமுக சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த  மீன்பிடி துறைமுக சாலை சீரமைக்கப்படுமா?
x

அதிராம்பட்டினம் அருகே சேதமடைந்த மீன்பிடி துறைமுக சாலை சீரமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் அருகே சேதமடைந்த மீன்பிடி துறைமுக சாலை சீரமைக்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 75 சதவீத மக்கள் மீன்பிடித் தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழிலான சங்காய உற்பத்தி, மீன் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே. இவர்கள் நாட்டுப்படகுகள் மூலம் மீன் பிடித்து தொழில் செய்து வரும் நிலையில் கிராமத்தில் இருந்து கடற்கரை வரை செல்லக்கூடிய துறைமுக சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது.

மீனவர்கள் சிரமம்

மீனவர்கள் கடலுக்குச் சென்று பிடித்து வரும் மீன்களை இருசக்கர வாகனங்களில் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.சில நேரங்களில் அவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சேதமடைந்த துறைமுக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story