சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா?
x

சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த ரேஷன் கடை

பட்டுக்கோட்டை நகராட்சி 22-வது வார்டு லட்சத்தோப்பு ஹவுசிங் யூனிட் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியர்கள் 216 குடும்பங்களும், அதைச் சுற்றி 334 வீடுகளும் உள்ளன. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் 550 கார்டுகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரேஷன் கடை பழைய கட்டிடத்தில் இயங்கி வருவதால் காரைகள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து உள்ளது.

சீரமைக்க கோரிக்கை

இந்த ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அந்த வார்டு உறுப்பினர் சரவணகுமார் நகராட்சி கூட்டத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் ரேஷன் கடையை பார்வையிட்டு மாற்றி இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் சேதமடைந்த ரேஷன் கடையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story