சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
x

கீழ்வேளூர் அருேக சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருேக சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

முக்கிய சாலை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வெண்மணி ஊராட்சி நாணக்குடியில் இருந்து, காக்கழனி ஊராட்சி நுகத்தூர், 64 மாணலூர் ஊராட்சி வழியாக திருவாருர் ஒன்றியம் பல்லாவரம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நுகத்தூர், 64 மாணலூர் கிராம மக்கள் மற்றும் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவாரூர் செல்வதற்கு முக்கிய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

சேதமடைந்துள்ளது

மேலும் கீழ்வேளூர், தேவூர், திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகள் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

சீரமைக்க வேண்டும்

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story