சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த இணைப்பு சாலை

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்றாம் சேத்தி வடக்கு குத்தகை பகுதியில், ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலையில் இருந்து ஆயக்காரன்புலம்- கரியாப்பட்டினம் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்த சாலை வழியாக தான் இப்பகுதி மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கும் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்டவைகளுக்கும் செல்ல வேண்டும். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கீழே விழுந்து காயம்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாகத்தான் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும்- குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக அமைத்துதர வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

1 More update

Next Story