ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா?


ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா?
x

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா?

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டை அருகே உள்ள கன்னியாகுறிச்சியில் வடிவழகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வாசலில் கடந்த 1972-ம் ஆண்டு அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் 4 தூண்களின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அந்த வழியாக செல்பவர்கள் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமக்கோட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story