ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?


ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?
x

ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நாகூர் வடக்கு பால்பண்ணைச்சேரி அருகில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்து ஏற்படுேமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தநடவடிக்கையும் இல்லை. எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story