சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டமா?


சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டமா?
x

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டமா? என்ற பீதி எழுந்துள்ளது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தை அடுத்த பழனியப்பபுரத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு விவசாய பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், சிறுத்தை போன்ற விலங்கு ஓடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தோட்டத்தில் பதிவான விலங்கின் கால் தடத்தையும் புகைப்படம் எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story