ரூ.22 லட்சத்தில் சீரமைப்பட்ட மகப்பேறு, அறுவை சிகிச்சை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?


ரூ.22 லட்சத்தில் சீரமைப்பட்ட மகப்பேறு, அறுவை சிகிச்சை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?
x

பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.22 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட மகப்பேறு, அறுவை சிகிச்சை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு தாலுகா கோனேட்டம்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை கட்டிடம் சேதமடைந்தது. பொதுப்பணித்துறையினர் ரூ.22 லட்சம் செலவில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து கடந்த மே மாதம் சுகாதார துறையினருக்கு ஒப்படைத்ததாக தெரிகிறது.

3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுநாள் வரை இந்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு அறுவை சிகிச்சை செய்யமுடியாத நிலை உள்ளது.

அதேபோல் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் பள்ளிப்பட்டு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ரூ.22 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கட்டிடம் தற்போது காட்சி பொருளாக மட்டுமே உள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகள் நோயாளிகளின் நலன் கருதி மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story