வெண்ணாற்றின் கரையோரத்தில் புதிய படித்துறை கட்டித்தரப்படுமா?


வெண்ணாற்றின் கரையோரத்தில் புதிய படித்துறை கட்டித்தரப்படுமா?
x

வெண்ணாற்றின் கரையோரத்தில் புதிய படித்துறை கட்டித்தரப்படுமா?

திருவாரூர்

வடபாதிமங்கலத்தில் வெண்ணாற்றின் கரையோரத்தில் புதிய படித்துறை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெண்ணாற்றின் கரையோரம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், புனவாசல் அரசு பள்ளி அருகில் வெண்ணாற்றின் கரையோரத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறையை அந்த பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் கோடை காலங்களில் குளங்களில் தண்ணீர் வற்றி போனாலும், அந்த படித்துறையில் இறங்கி வெண்ணாற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளித்தும், ஆடைகளை துவைத்தும் பயன்படுத்தி வந்தனர்.

இடிந்து விழுந்த படித்துறை

நாளடைவில் அந்த படித்துறை இடிந்து விழுந்து சேதமானது. சேதமான படித்துறை மீண்டும் சீரமைக்கப்படவில்லை. தற்போது அந்த இடத்தில் படித்துறை இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாதது போல் உள்ளது. ஆனால் அந்த இடத்தில் இடிந்து விழுந்த கற்கள் மட்டும் சுவடுகளாக காணப்படுகிறது. இதனால் இன்றளவும் பயன்படுத்தும் அந்த இடத்தில் கரடுமுரடான கற்கள் மற்றும் பள்ளத்தில் இறங்கி இன்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் குளித்து வருகின்றனர். ஆனால் படித்துறை இல்லாமல் உள்ளதால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

புதிதாக கட்டித்தரப்படுமா?

எனவே கற்கள் சிதறி பள்ளமாக உள்ள வெண்ணாற்றின் கரையோரத்தில் புதிதாக படித்துறை கட்டித்தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story