குட்டையில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா?


குட்டையில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள குட்டையில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவாரூர்

திருமக்கோட்டை:

திருமக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பஸ்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.இந்த சாலையில் உள்ள வடக்கு தெருவில் தடுப்புச்சுவர் மற்றும் வேலி உள்ளிட்ட பாதுகாப்பு எதுவுமின்றி குட்டை ஒன்று உள்ளது. மேலும் இந்த குட்டை இருக்கும் இடத்தில் ஆபத்தான வளைவு உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி அருகில் உள்ள குட்டையில் விழும் நிலை உள்ளது. எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர், பொதுமக்கள் நலன்கருதி இந்த குட்டைக்கு தடுப்புச் சுவர் அல்லது இரும்பு தகடு சுவர் அமைத்து தர வேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story