பூலுவப்பட்டி கிளை நூலகம் புத்துயிர் பெறுமா
பூலுவப்பட்டி கிளை நூலகம் புத்துயிர் பெறுமா என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
பேரூர்
பூலுவப்பட்டி கிளை நூலகம் புத்துயிர் பெறுமா...? என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காமராஜர் திறந்த நூலகம்
கோவை மாவட்ட நூலக ஆணைக்குழுவின், பூலுவபட்டி கிளை நூலகம் கோவையை அடுத்த பேரூர் ஆலாந்துறையில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் வழியில் 20 சென்ட் இடத்தில் ஓட்டு கட்டி டத்தில் செயல்பட்டு வருகிறது.
இது, கடந்த 1955-ம் ஆண்டு அக் டோபர் மாதம் 12-ந் தேதி அப்போதைய முதல்- அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.தற்போது இந்த நூலகத்தில் 3,617 பேர் உறுப்பினர்களாக உள்ள னர்.
இங்கு 20 பேர் அமர்ந்து வாசிக்கும் அளவிற்கு தான் இட வசதிகள் உள்ளது. இந்த நூலகம், கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி சீரமைக்கப்பட்டது.
ஓட்டு கட்டிடம்
ஆனாலும் 67 ஆண்டுகளாக அந்த நூலகம் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் பின்புறம் உள்ள இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பாம்பு, பூச்சிகளின் புகலிடமாக உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் நூலகம் அருகே சிலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நூலகத்தில் அமர்ந்து வாசகர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
நூலக கட்டிடத்தின் அருகே ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 119 பெண் குழந்தைகள் உள்பட மொத்தம் 238 மாணவர்கள் படிக்கின்றனர்.
எதிர்பார்ப்பு
எனவே நூலகத்தை சுற்றி புதர்களை அகற்ற வேண்டும். அந்த பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பூலுவபட்டி பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூலக கட்டிடத் தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் வந்து பயன் பெறுவார்கள். எது எப்படியோ... பூலுவப்பட்டி கிளை நூலகம் புத்துயிர் பெறுமா...? என்பது மாணவர்கள் மற்றும் வாசகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.