பூம்புகார் மீனவ குடியிருப்பு நுழைவுவாயில் புதுப்பிக்கப்படுமா?


பூம்புகார் மீனவ குடியிருப்பு நுழைவுவாயில் புதுப்பிக்கப்படுமா?
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொலிவிழந்து காணப்படும் பூம்புகார் மீனவ குடியிருப்பு நுழைவுவாயில் புதுப்பிக்கப்படுமா? என்று மீனவ மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பொலிவிழந்து காணப்படும் பூம்புகார் மீனவ குடியிருப்பு நுழைவுவாயில் புதுப்பிக்கப்படுமா? என்று மீனவ மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சிலப்பதிகார கலைக்கூடம்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1973-ம் ஆண்டு சிலப்பதிகாரத்தை நினைவு கூறும் வகையில் பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளிட்டவைகள் அடங்கிய சுற்றுலா வளாகம் அமைக்கப்பட்டு, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

அப்போது சுற்றுலா வளாகம் அமைத்திட ஏதுவாக அந்த பகுதி மீனவர்கள் நிலம் வழங்கியும், கட்டுமான பணிகளுக்கு உறுதுணையாகவும் இருந்தனர். இதையடுத்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்திட ஏதுவாக குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தார். அந்த குடியிருப்புகளுக்கு செல்லும் பகுதியில் ஒரு நுழைவுவாயில் கட்டப்பட்டு, அந்த நுழைவுவாயிலுக்கு முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டது.

பொலிவிழந்து உள்ளது

இந்த நுழைவுவாயில் மற்றும் அதன் அருகே செல்லும் சாலை ஆகியவை நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அந்த நுழைவுவாயில் பொலிவிழந்து அதில் போஸ்டர்கள் ஒட்டியும், அதில் செடிகள் முளைத்தும் காணப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், பூம்புகார் மீனவ கிராமத்திற்கு செல்லும் வாயிலாக காணப்படும் நுழைவுவாயிலை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் அவரது பெயரை தாங்கிய நுழைவுவாயில் பொலிவிழந்து இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story