திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?


திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
x

திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

திருவாரூர்

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவதால் திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி ரெயில்ேவ கேட்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 32 ஊராட்சிகளையும், 92 சிறிய குக்கிராமங்களையும் கொண்ட பகுதியாகும். இந்த பகுதியில் விவசாய பணிகள் மட்டுமே முழுமையாக நடைபெறும். திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு திருத்துறைப்பூண்டி நகரத்தின் மையப்பகுதியில் செல்லும் ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அதேபோல் வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பு, காய்கறி, பூ வகைகள் உள்ளிட்டவையும் திருத்துறைப்பூண்டி ெரயில்வே கேட்டை கடந்து தான் தஞ்சை, திருச்சி செல்ல வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வரும் பயணிகள் வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும், திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து மன்னார்குடி செல்லும் பொதுமக்கள் மற்றும் விளக்குடி, ராயநல்லூர், கோட்டூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து செல்பவர்களும் ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் ெரயில் வரும் நேரங்களில் கேட் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலின் போது வாகனங்கள் செல்லமுடியாமல் வரிசையாக சாலையில் நிற்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். . எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருத்துறைப்பூண்டியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகல் ரெயில்பாதையாக

இதுகுறித்து வரம்பியத்தை சேர்ந்த ஜோதிபாசு கூறுகையில், திருத்துறைப்பூண்டி நகரம் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது. தற்போது மீட்டர் கேஜ் ெரயில்வே பாதை அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்டு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. ெரயில்கள் வரும் ேபாது திருத்துறைப்பூண்டி நகரத்தில் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலால் அந்த பகுதி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், ஆஸ்பத்திரிக்கு செல்வோர், பொருட்கள் வாங்க நகரத்திற்கு வருவோர் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண திருத்துறைப்பூண்டியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றார்.


Next Story