பாலக்குறிச்சி பாசன வாய்க்கால் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?


பாலக்குறிச்சி பாசன வாய்க்கால் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?
x

பாலக்குறிச்சி பாசன வாய்க்கால் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே இடிந்து விழுந்த பாலக்குறிச்சி பாசன வாய்க்கால் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசன வாய்க்கால் தரைப்பாலம்

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து சேந்தங்குடி செல்லும் சாலையில் பாலக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி சாலையின் குறுக்கே அந்த பகுதி விவசாயிகள் பயன்பாட்டிற்காக ஊட்டியாணி பாசன வாய்க்கால் தரைப்பாலம் கட்டப்பட்டது.

இந்த பாசன வாய்க்கால் மூலம் வெண்ணாற்றிலிருந்து வரும் தண்ணீரை பாலக்குறிச்சி, ஊட்டியாணி, புள்ளமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு அந்த பகுதி விவசாயிகள் கொண்டு சென்று சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா?

ஊட்டியாணி பாசன வாய்க்கால் தரைப்பாலத்தின் ஒரு பக்கம் உள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை சீரமைக்கப்படவில்லை. தடுப்பு சுவர் இடிந்து விழுந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. மேலும் போதிய அளவு தண்ணீர் செல்வது தடைபடுவதாகவும், ஆபத்தான வளைவில் உள்ள சாலையோரத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்து வருவதாகவும் அந்த பகுதி விவசாயிகள், வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழுந்த பாசன வாய்க்கால் தரைப்பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story