வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?


வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?
x

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ள புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை, மே.29-

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ள புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

விபத்து அபாயம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவிக்க வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வால்பாறை-பொள்ளாச்சி இடையே 40 கி.மீ. மலைப்பாதையாகவும், 25 கி.மீ. சமவெளி சாலையாகவும் உள்ளது. மலைப்பாதை சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதியில் மழை பெய்ததால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் சாலையோரத்தில் புதர்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதர் செடிகளை அகற்ற வேண்டும்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பதையில் சாலையோரத்தில் புதர் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் வளைவுகளில் திரும்பும்போது, எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவது இல்லை. இதனால் மலைப்பதையில் இயக்கப்படும் அரசு பஸ், தனியார் வாகனங்கள், குறிப்பாக சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் வளர்ந்துள்ள புதர் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story