வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பார்வையாளர் மாடம் திறக்கப்படுமா?


வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பார்வையாளர் மாடம் திறக்கப்படுமா?
x

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 19-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள ஆழியாறு அணை பார்வையாளர் மாடம் திறக்கப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 19-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள ஆழியாறு அணை பார்வையாளர் மாடம் திறக்கப்படுமா என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆழியாறு அணை பார்வையாளர் மாடம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நல்லமுடிபூஞ்சோலை, கூழாங்கல் ஆறு, நீரார்அணை, சோலையாறு அணை, அட்டகட்டி ஹார்ன்பில் காட்சி முனை மற்றும் பசுமையான வனப்பகுதி, பச்சை பசேெலன காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனை காண வால்பாறைக்கு தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள ஆழியாறு அணை பார்வையாளர் மாடத்தில் இருந்து அணையின் அழகை ரசித்து வந்தனர். இந்த நிலையில் பார்வையாளர் மாடம் கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

எதற்காக இந்த பார்வையாளர் மாடம் மூடப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் சரியாக தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் முறையான பதில் இல்லை. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

எனவே விரைந்து ஆழியாறு அணை பார்வையாளர் மாடத்தை திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பார்வையாளர் மாடத்தில் இருந்து இயற்கை அழகை ரசிக்கும் வகையில் டெலஸ்கோப் அமைத்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் வனத்துறையினருக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திறக்கப்படுமா?

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆரம்ப காலத்தில் ஆழியாறு அணை பார்வையாளர் மாடம் பாதுகாப்பற்ற நிலையில், சுற்றுச்சுவர் மற்றும் தடுப்பு வேலிகள் இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து பொள்ளாச்சி வனக்கோட்ட வனத்துறையினரால் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆழியாறு அணை பார்வையாளர் மாடம் வனத்துறையினரால் முட்செடிகளால் அடைத்து வைக்கப்பட்டு வேட்டை தடுப்பு காவலரை அந்த இடத்தில் பணியில் அமர்த்தி சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று விரைந்து பார்வையாளர் மாடத்தை திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story