பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?


பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?
x

பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலையில் மாற்றம் வர வாய்ப்புள்ளதா? என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

விருதுநகர்

பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலையில் மாற்றம் வர வாய்ப்புள்ளதா? என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

சமையல் எண்ணெய்

இந்திய மக்களின் சமையல் எண்ணெய் தேவைக்கு 70 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகிறது.

சூரியகாந்தி எண்ணெய், சோயா பீன் எண்ணெய் ஆகியவை உக்ரைன், லத்தீன் அமெரிக்கா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்தும் பாமாயில் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

பாமாயிலை பொருத்தமட்டில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளிலேயே விலை மிக குறைந்து விட்ட நிலையில் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டு விட்டதால் இறக்குமதி பாமாயில் விலை மிகவும் குறைந்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரிச்சலுகையை கடந்த ஆகஸ்டு மாதம் அமலுக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது மேலும் 6 மாதத்திற்கு அதாவது, 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

குறைய வாய்ப்பு இல்லை

இதன் மூலம் பண்டிகை காலங்களிலும் சமையல் எண்ணெய் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு உள்ளூர் சமையல் எண்ணெய் விலைகளிலும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கிலோவுக்கு ரூ. 15 வரை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் உற்பத்தியாளர்கள் தேவை மற்றும் உற்பத்தி அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுமே தவிர திடீரென விலை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தனர்.

உள்ளூர் சமையல் எண்ணெய் வகைகளான நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றின் விலைகளில் மத்திய அரசின் நடவடிக்கையால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர். சமையல் எண்ணெய் விலை குறைய எண்ணெய் வித்துக்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.


Next Story