வேகத்தடை அமைக்கப்படுமா?


வேகத்தடை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 24 Aug 2023 8:45 PM GMT (Updated: 24 Aug 2023 8:45 PM GMT)

நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலை இணையும் கோதவாடி பிரிவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலை இணையும் கோதவாடி பிரிவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நான்கு வழிச்சாலை

கோவை-பொள்ளாச்சி இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இதில் கிணத்துக்கடவு ஊருக்குள் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் கிழ் பகுதியில் சர்வீஸ் சாலை(அணுகுசாலை) அமைக்கப்பட்டு உள்ளது. கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் வந்து கோதவாடி பிரிவில் நான்கு வழிச்சாலையில் இணைகின்றன.

வேகத்தடை

இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலை இணையும் கோதவாடி பிரிவில் வேகத்தடை எதுவும் இல்லை. இதன் காரணமாக சர்வீஸ் சாலையில் வரும் வாகனங்கள் வேகமாக சென்று, நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

சர்வீஸ் சாலை கோதவாடி பிரிவில் நான்கு வழிச்சாலையுடன் இணைகிறது. இந்த இடத்தில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story