தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

சீர்காழி அருகே அல்லிவிளாகம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருவெண்காடு:
சுரங்கப்பாதை
விழுப்புரம்- நாகை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் சீர்காழி அருகே அல்லி விளாகம் கிராமத்தில் நெடுஞ்சாலை இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை அமைக்கப்படும் இடத்தின் அருகே ஒரு வழிப்பாதையாக சாலைப்போக்குவரத்து நடந்து வருகிறது.இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை.
வேகத்தடை
மேலும் இரவு நேரங்களில் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்படாத காரணத்தால், இந்த சுரங்கப்பாதை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி இரவில் விபத்தில் சிக்குகிறார்கள்.இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
சுரங்கப்பாதை இரவு நேரங்களில் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வருவதால் அதில் மோதி விபத்துகள் நடக்கின்றன.எனவே அல்லிவிளாகம் பகுதியில் சுரங்க பாதை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






