விண்ணமங்கலம் வெண்ணாற்று பால சாலை சீரமைக்கப்படுமா?


விண்ணமங்கலம் வெண்ணாற்று பால சாலை சீரமைக்கப்படுமா?
x

விண்ணமங்கலம் வெண்ணாற்று பால‌ சாலை சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர்

குண்டும், குழியுமான விண்ணமங்கலம் வெண்ணாற்று பால சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெண்ணாற்று பாலம்

திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி மாநில சாலையில் விண்ணமங்கலம் கிராமத்தின் அருகே வெண்ணாற்றில் பாலம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டியை இணைக்கும் வகையிலும், பூதலூர் ெரயில் நிலையத்திற்கு செல்லும் வகையிலும் இந்த பாலம் அமைந்துள்ளது. தினந்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், திருச்சி தொழிற்சாலைகளுக்கும் இந்த பாலத்தை கடந்து பூதலூர் சென்று ெரயிலில் ஏறி மக்கள் சென்று வருகின்றனர். பழமையான இந்த பாலம் வலுவிழந்த பாலம் கவனமாக செல்லவும் என்று நெடுஞ்சாலை துறை சார்பில் பாலத்தின் இரு பக்கமும் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

குண்டும், குழியுமான சாலை

இந்த பாலத்தின் மேற்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான விண்ணமங்கலம் வெண்ணாற்று பால சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமுக ஆர்வலர் கருணாநிதி கூறுகையில்,

விண்ணமங்கலம் வெண்ணாற்று பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனம், கார்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமான காட்சி அளிக்கிறது.

சீரமைக்க வேண்டும்

பூதலூர் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் இந்த பாலத்தில் செல்லும் போது குண்டு்ம், குழியுமாக உள்ள சாலையில் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.


Next Story