டாஸ்மாக் கடை அருேக மதுபாட்டில்கள் விற்ற 7 பேர் கைது


டாஸ்மாக் கடை அருேக மதுபாட்டில்கள் விற்ற 7 பேர் கைது
x

திருப்பனந்தாள் அருகே வாக்கி டாக்கி மூலம் பேசி டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்,

திருப்பனந்தாள் அருகே வாக்கி டாக்கி மூலம் பேசி டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாக்கி டாக்கி மூலம்...

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் மண்ணியாறு அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்தநிலையில் நேற்று மண்ணியாற்றங்கரையில் சிலர் வாக்கி டாக்கியில் பேசி மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதாக திருப்பனந்தாள் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சென்று அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது மரத்துறை கீழத்தெரு செந்தில் (வயது40), திருப்பனந்தாள் வடக்கு தெருவை சேர்ந்த சசிகுமார் (50), காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (55), விளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (30), சோழபுரம் துலுக்கவெலியை சேர்ந்த சேகர் (63), கல்லூர் கணேசன் (46) காட்டுமன்னார்கோவில் குளக்கரை தெருவை சேர்ந்த சரவணன் (26) ஆகிய 7 பேர் வாக்கி டாக்கி மற்றும் மதுபாட்டில்களுடன் நின்று மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது - பறிமுதல்

இவர்கள் 7 பேைரயும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து வெளிமாநில லேபிள்கள் ஒட்டப்பட்ட 50 மதுபாட்டில்கள் 3 வாக்கி டாக்கிகள், 2 சார்ஜர்களையம் போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மூலம் வாக்கிடாக்கிகளை வாங்கியது தெரியவந்தது. மேலும் அவர்கள் டாஸ்மாக் அருகே மண்ணியாற்றங்கரையில் ரகசியமாக பார் நடத்தியதும், வாக்கி டாக்கியில் பேசி மது அருந்துபவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தின்பண்டங்களை ரகசியமாக சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story