நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 2 நாட்களில் ரூ.9¼ கோடிக்கு மது விற்பனைடாஸ்மாக் அதிகாரிகள் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 2 நாட்களில் ரூ.9¼ கோடிக்கு மது விற்பனைடாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 2 நாட்களில் ரூ.9¼ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

188 டாஸ்மாக் கடைகள்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி சராசரியாக ரூ.1½ கோடி முதல் ரூ.2½ கோடி வரை மது விற்பனை நடைபெறும். குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். இதற்காக டாஸ்மாக் அதிகாரிகளும் தேவையான அளவு மதுபாட்டில்களை இருப்பு வைத்து கொள்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் மதுப்பிரியர்கள் கடந்த 31-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். குறிப்பாக அன்று இரவு 10 மணி வரை மது விற்பனை படுஜோராக நடந்தது. அனைத்து கடைகளிலும் மதுப்பிரியர்கள் போட்டி போட்டு மதுபாட்டில்கள் வாங்குவதை பார்க்க முடிந்தது.

ரூ.9¼ கோடிக்கு மது விற்பனை

ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி ரூ.5 கோடியே 10 லட்சத்திற்கும், நேற்று முன்தினம், அதாவது புத்தாண்டு தினத்தன்று ரூ.4 கோடியே 15 லட்சத்திற்கும் என மொத்தமாக 2 நாட்களில் ரூ.9¼ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு 31-ந் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடியே 17 லட்சத்துக்கு மது விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story