பாப்பிரெட்டிப்பட்டியில்டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற பெண்களால் பரபரப்பு


பாப்பிரெட்டிப்பட்டியில்டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற பெண்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 March 2023 12:30 AM IST (Updated: 6 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பகல், இரவு நேரங்களில் ஏராளமான மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மது குடிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் பலமுறை புகார் தெரிவித்தும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி நேற்று இரவு 7 மணி அளவில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story