பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்


பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

மயிலாடுதுறை

பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், போட்டி தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வெற்றி பெற பயிற்சியும், முயற்சியும் முக்கியமான ஒன்றாகும். நாம் மனதில் அடிக்கடி சாதிக்க வேண்டும் என்பதை நினைக்க கொள்ள வேண்டும். மனதில் சிந்தனையை விதைக்க வேண்டும். விடாமுயற்சி அவசியமான ஒன்றாகும்.

நம்பிக்கை

மனதில் இயற்கையாகவே வலிமை, திறமை, நம்பிக்கை உள்ளவராக நாம் மாற வேண்டும். உங்களுக்கு தமிழக அரசு சார்பில் போட்டி தேர்வை எதிர்கொள்ள நிறைய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நம்பிக்கையோடு இருந்தால் வாழ்க்கையில் வெல்ல முடியும்.

உழைப்பு இருந்தால் உயர்ந்த இடத்திற்கு வர முடியும். குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றி உங்களிடம் உள்ளது. அதை நீங்கள் சாதித்து காட்ட வேண்டும்.

போட்டித்தேர்வு

இந்த பயிற்சியின் மூலம் மத்திய அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று வேலை வாய்ப்பை பெற உதவிடும் வகையில் இலவ பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேலு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீத்தாலட்சுமி, மயிலாடுதுறை மாவட்ட நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, வணிகவியல் துறை தலைவர் பழனிவேலு மற்றும் இலவச பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story