பட்டினி போராட்டம் வாபஸ்
பட்டினி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே வயலோகத்தில் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் தொடர்பான பணிகள் முற்றிலும் முடங்கப்பட்டதை கண்டித்தும், அலுவலகத்தில் இருக்கும் மின்சாதன பொருட்கள், எந்திரங்கள் பழுது சரி செய்யப்படாததை கண்டித்தும் வயலோகம் பகுதி பொதுமக்கள் சார்பில் பட்டினி போராட்டம் நடத்துவதாக முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதனையடுத்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் சார்பில் காவுதீன், நசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பழுதான எந்திரங்கள் சரி செய்யவும், நடப்பு மாதத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதன் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டதாக பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.