அனுமதியின்றி மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் மீது வழக்கு
கம்பம் அருகே அனுமதியின்றி மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் வண்டிப்பாதை உள்ளது. அங்கு அரசு புறம்போக்கு நிலத்தில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 25-ந்தேதி அங்கிருந்த 2 மலை வேம்பு, 1 மாமரம் உள்ளிட்ட 10 மரங்களை அனுமதியின்றி மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாராயணத்தேவன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மரங்களை வெட்டி கடத்தியது கம்பத்தைச் சேர்ந்த பருக்கான், நடராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story