பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு


பள்ளிபாளையம்  காவிரி ஆற்றில் குதித்து   தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
x

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் புதிய பாலம் வழியாக நேற்று 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றார். பின்னர் அவர் திடீரென காவிரி ஆற்றில் குதித்தார். அப்போது அந்த வழியாக சென்ற பள்ளிபாளையம் நகராட்சி துணை தலைவர் பாலமுருகன் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் குதித்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி ஜோதி (வயது 48) என்பது தெரியவந்தது.


Next Story