கர்ப்பத்தை கலைக்க மாத்திரை சாப்பிட்ட பெண் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்தியில் அனுமதி: போலி டாக்டர் கைது
கடலூர் அருகே கர்ப்பத்தை கலைக்க மாத்திரை சாப்பிட்ட பெண் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர்,
திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த வர் குணசேகரன். அவரது மனைவி கஸ்தூரி (வயது32)இவருக்கு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த கஸ்தூரி கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆவட்டியில் உள்ள மருந்த கத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார். நேற்று அவருக்கு அடி வயிறு வலிப்பதாகவும் ரத்த கசிவு ஏற்படுவதாகும் கூறி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சை பெற்றார். கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை அவரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் கஸ்தூரி ஆவட்டியில் உள்ள போலி டாக்டர் சுரேஷ் என்ப வரிடம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட தாக கூறியுள்ளார். ரத்தக் கசிவு காரணமாக அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷ் ஏற்கனவே ராமநத்தம் போலீசாரால் வழக்கு பதிவு செய்து மருத்துவ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது பிணையில் வந்து ராமநத்தம் காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்து போட்டு வருகிறார்.
இந்நிலையில் தொடர்ந்து அவர் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் கஸ்தூரி கூறியுள்ளது உண்மையா அந்த கடையில் தான் மாத்திரை வாங்கினாரா என்பது குறித்து திட்டக்குடி டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.